தொட்டாற் சிணுங்கி செடியின் நன்மைகள்!!

By Devaki Jeganathan
16 Sep 2024, 00:51 IST

தொட்டாற் சிணுங்கி செடி நாம் அனைவருக்கும் தெரியும். சிறுவயதில் நாம் அனைவரும் இதை தொட்டு விளையாடியிருப்போம். இது, தோல்வியாதி, குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்று மருந்தாக உள்ளது. இதன் மறுத்து பயன்கள் பற்றி பார்க்கலாம்.

ஆஸ்துமா எதிர்ப்பு

தொட்டாற் சிணுங்கி இலைகள் ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இது ஆஸ்துமா ஆபத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இது ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படுகிறது.

ஆரோக்கியமான சருமம்

தொட்டாற் சிணுங்கியின் இலைகளைச் சாப்பிடுவதன் மூலம், இரத்தம் சுத்தப்படுத்தப்படும். இதனால், முகப்பரு, முகச்சுருக்கம், மங்கு ஆகியவை நீங்கும். மேலும், இது அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மன அழுத்தம் குறையும்

இதன் பயன்பாடு மனதை அமைதிப்படுத்துகிறது. மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் மனதை மகிழ்ச்சியாக வைக்கும். மனச்சோர்வில் இருந்து உங்களை விடுவிக்கும்.

வயிற்று பிரச்சினை

வயிற்றில் தொற்று ஏற்பட்டால், உலர்ந்த தொட்டாற் சிணுங்கியின் இலைகளை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகை கொண்டுள்ளது. இது குடல் புழுக்கள் அல்லது பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் தொற்றுநோயைக் குறைக்க உதவுகிறது.

மூல நோய்க்கு

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது மற்றும் பைல்ஸ் பிரச்சனையில் திறம்பட செயல்படுகிறது.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் வயிறு தொடர்பான பல நோய்களை குணப்படுத்தவும் தொட்டாற் சிணுங்கியின் இலைகளை பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோய்க்கு

தொட்டாற் சிணுங்கி இலைகளில் நீரிழிவு நோய்க்கான எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலில் இரத்த குளுக்கோஸின் அளவைக் குறைக்கிறது.

சிறுநீரக பிரச்சினை

உடல் சூடு அதிகமானால் சிறுநீர்த் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் அளவு காலையில், தயிரில் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் நல்லது.