இது காய்கறி அல்ல... கோடைக்கான மருத்து பெட்டி - அவ்வளவு நல்லது!
By Kanimozhi Pannerselvam
08 Mar 2024, 10:57 IST
வைட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 ஆகியவை கம்பு புடலையில் அதிக அளவில் காணப்படுகின்றன. இது தவிர, அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளது. இதனால் உடல் எடையை குறைப்பவர்களுக்கு இந்த காய் வரப்பிரசாதம் ஆகும்.
இந்த காய் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள நார்ச்சத்து எடை மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் இதய நோய்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
கம்பு புடலையில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ, கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் ஏ ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆயுர்வேதத்தின் படி, கம்பு புடலை ரத்தத்தை சுத்திரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் திறன் கொண்டவை. எல்.டி.எல் கொழுப்பைக் குறைப்பதுடன், எச்.டி.எல் கொழுப்பை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி இருப்பதால், சருமத்தில் ஏற்படும் வயதாகும் நடைமுறையைக் குறைக்க உதவுகிறது.