மழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?

By Kanimozhi Pannerselvam
08 Oct 2024, 13:30 IST

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின் படி, மழைக்காலத்தில் தயிர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தயிர் ஒரு குளிர்ச்சியான உணவு, இதனை மழைக்காலத்தில் எடுத்துக் கொண்டால், வாதம், பித்தம் கபம் போன்றவற்றை உருவாக்கும் என்பதால் தவிர்க்க வலியுறுத்துகிறது.

வலியை அதிகரிக்கும்

மூட்டு வலி உள்ளவர்கள் மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தயிர் உடலில் வீக்கம் மற்றும் சளி உற்பத்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது, இது நிலையை மோசமாக்குகிறது.

தொண்டை புண்

நீங்கள் தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவற்றால் அவதிப்படுகிறீர்கள் என்றால், தயிர் சாப்பிடுவது அதனை மேலும் மோசமாக்கும். அடிக்கடி சளி, இருமல் மார்பு நெரிசல் இருப்பவர்கள் தயிர் தவிர்ப்பது நல்லது.

இவர்களும் தவிர்க்கனும்

தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் நீங்கள் அதை தவறான வழியில் உட்கொண்டால் அல்லது தவறான உணவுகளுடன் இணைத்தால், அது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். புரோட்டீன் அல்லது சிட்ரிக் உணவுகளுடன் தயிர் சாப்பிட்டால், அமிலம் உருவாகி நெஞ்செரிச்சல் மற்றும் புண்கள் ஏற்படும்.

தயிர் சாப்பிட சரியான வழி என்ன?

மழைக்காலங்களில் தயிர் சாப்பிட விரும்பினால், அதில் ஒரு சிட்டிகை வறுத்த சீரக தூள், கருப்பு மிளகு மற்றும் இந்து உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது, இந்த கலவை தயிரின் குளிர்ச்சியான ஆற்றலை சமன் செய்ய உதவும். இது சிறந்த செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.