நல்ல ஆரோக்கியத்திற்கு சர்க்கரையை கட்டுப்படுத்துவது அல்லது நீக்குவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். எனினும் சர்க்கரையை நிறுத்துவதற்கு முன் உடல் அதன் பிறகு எவ்வாறு செயல்படக்கூடும் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்
சர்க்கரை பசி
சர்க்கரையை விட்டுவிடுவதற்கான முடிவை உடல் எளிதில் ஏற்றுக்கொள்ளாது. பழக்க வழக்கம் மற்றும் உணர்வுகளால் எல்லா இனிப்புகளையும் சாப்பிட ஆசையைத் தூண்டும். குறிப்பாக, உணவுக்குப் பிறகு இனிப்புகள் சாப்பிட வேண்டும் என்ற வலுவான ஆசை தோன்றும்
தூக்க பிரச்சனைகள்
சர்க்கரையை கைவிடுவதன் காரணமாக, கார்டிசோல் அளவை அல்லது மன அழுத்த ஹார்மோன்கள் பாதிக்கப்படலாம். இது ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதை கடினமாக்குகிறது
தலைவலி
சர்க்கரை நிறுத்திய பிறகு, ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற தீவிர ஆசை இருக்கும். அது கிடைக்காத சமயத்தில் தலைவலியை ஏற்படுத்துகிறது
எடை மாற்றங்கள்
சர்க்கரையை நிறுத்திய பிறகு உடல் எடை ஏற்ற இறக்கமாக காணப்படலாம். மேலும், அதிக சர்க்கரை உட்கொள்ளல் உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் தொடர்புடையதாகும்
சோர்வு
சர்க்கரையைக் கைவிட்ட பிறகு உடலில் ஆற்றல் அளவுகள் குறையக்கூடும். ஏனெனில், சர்க்கரை உடனடி ஆற்றலை வழங்கக்கூடியதாகும்