ஆயில் ஃபுட்ஸ் சாப்பிட்ட பின் இதெல்லாம் மறந்தும் செய்யாதீங்க.

By Gowthami Subramani
13 Dec 2023, 19:35 IST

இன்று பெரும்பாலானோர் எண்ணெய் நிறைந்த உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் இவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே செரிமானத்திற்காக எண்ணெய் உணவுக்குப் பின் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்

உடனடி உடற்பயிற்சி

உணவு செரிமானத்திற்கு எண்ணெய் உணவுகள் இடையூறாக இருப்பதால், உடனடியாக கடுமையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக லேசான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்

இறுக்கமான ஆடை

எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொண்ட பின், இறுக்கமான ஆடைகளை அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இது மேலும் அஜீரண பிரச்சனையை உண்டாக்கலாம்

மனஅழுத்தம் நிறைந்த செயல்பாடு

செரிமான பிரச்சனையில் இருக்கும் போது மன அழுத்தம் நிறைந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது பிரச்சனையை மேலும் அதிகமாக்கலாம்

அதிகமாக உண்ணுதல்

எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிடுவது செரிமானப் பிரச்சனைகள் மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தலாம். எனவே, பகுதியின் அளவைக் குறைக்க வேண்டும்

புகைபிடிப்பது

சாப்பிட்ட உடனேயே புகை பிடிப்பது செரிமானத்தைப் பாதிக்கிறது மற்றும் பல்வேறு உடல்நல அபாயங்களை அதிகரிக்கலாம்

உடனே தூங்குவது

கொழுப்பு சத்து நிறைந்த எண்ணெய் உணவுகளைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவது நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியை உண்டாக்கும். எனவே ஆயில் உணவு உண்டபிறகு 10-15 நிமிடங்கள் நடந்த பிறகு தூங்கலாம்

அதிக தண்ணீர் குடிப்பது

உடலுக்கு நீரேற்றம் முக்கியமானதாக இருப்பினும், சாப்பிட்ட உடனேயே அதிக தண்ணீர் குடிப்பது செரிமான கோளாறுகள் பலவீனப்படுத்தலாம்

முடிவுரை

அமிலத்தன்மை மற்றும் இன்னும் பிற பிரச்சனைகளைத் தவிர்க்க எண்ணெய் உணவுக்குப் பின் மேலே கூறப்பட்ட விஷயங்களைத் தவிர்ப்பது அவசியம். தனிப்பட்ட ஆலோசனைக்கு சுகாதார நிபுணரை அணுகி பயன்பெறலாம்