கொலஸ்ட்ரால் அளவை சிரமம் இல்லாமல் குறைக்க இந்த மசாலா பொருட்கள் போதும்!

By Karthick M
22 Jun 2025, 09:30 IST

கொலஸ்ட்ரால் அளவை சிரமம் இல்லாமல் குறைக்க வீட்டில் உள்ள சில மசாலா பொருட்களை முறையாக பயன்படுத்துவதே பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

இஞ்சியில் ஜிஞ்சரால் கலவை உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு மற்றும் கொழுப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.

மஞ்சளில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. கொழுப்பை குறைக்க பெருமளவு உதவும்.

இலவங்கப்பட்டை பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா. இது கொழுப்பை குறைப்பதோடு இதய நோய் ஆபத்தை குறைக்கும்.

கருப்பு மிளகு அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சிறந்த மசாலாப் பொருளாகும், இது கொலஸ்ட்ரால் குறைக்கும்.