இவர்கள் எல்லாம் மறந்து கூட கீரை சாப்பிடக்கூடாது!!

By Devaki Jeganathan
18 May 2025, 20:26 IST

கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலருக்கு, கீரை சாப்பிடுவது பெரிய ஆபத்தை ஏற்படும். யாரெல்லாம் கீரை சாப்பிடக்கூடாது என பார்க்கலாம்.

கீரையின் சத்துக்கள்

கீரையில் கரோட்டின், அமினோ அமிலங்கள், இரும்பு, அயோடின், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளது.

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டால் கீரையை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது உடலில் ஆக்ஸாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால், கால்சியம் ஆக்சலேட் சிறுநீரகங்களில் குவிந்து, உடலில் பல நோய்களை ஏற்படுத்தும்.

சிறுநீரக கல்

கீரையை உட்கொள்வதால் கால்சியம் ஆக்சலேட் கற்களாக சிறுநீரகத்தில் படியும் அபாயம் உள்ளது. இந்நிலையில், சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் கீரை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மூட்டு வலி பிரச்சனை

கீரையில் பியூரின் காணப்படுகிறது, இது ஒரு வகை கலவை ஆகும். ஆக்ஸாலிக் அமிலம் மற்றும் பியூரின்கள் சேர்ந்து மூட்டுவலியை உண்டாக்குகிறது, எனவே அதை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

இரத்த உரைத்தல் மருந்து

ரத்தத்தை உறையும் மருந்து சாப்பிட்டாலும் கீரை சாப்பிடக்கூடாது. கீரையில் வைட்டமின் ஏ உள்ளது, இது மருந்துகளில் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

வாயு பிரச்சினை

எப்பொழுதும் வாயுவால் அவதிப்படுபவர்களுக்கு கீரை சாப்பிடுவது நல்லதல்ல. இதில், அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, அதன் அதிகப்படியான நுகர்வு வாயுவை அதிகரிக்கும்.

வயிற்றுப்போக்கு

கீரையில் நார்ச்சத்து, சோடியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. இதனால், தொடர்ந்து லூஸ் மோஷன் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு பிரச்னைகள் அதிகரிக்கலாம்.