உடலுக்கு வைட்டமின் டி என்பது மிக முக்கியமாகும். இது சூரிய ஒளியில் கிடைக்கும் என்றாலும் சில உணவுகள் மூலமாகவும் இந்த சத்துக்களை பெறலாம்.
வைட்டமின் D நிறைந்த ஆதாரமாக காளான்கள் அமைகிறது. இதன் நுகர்வு வைட்டமின் D2 மற்றும் D3-ஐ மிகவும் அதிகரிக்க உதவுகிறது.
முட்டைகள் உட்கொள்வது புரதத்தின் மிகப்பெரிய ஆதாரமாகும். மஞ்சள் கருவில் வைட்டமின் டி ஊட்டச்சத்து உள்ளடக்கம் அதிகம் உள்ளது.
சால்மன், கானாங்கெளுத்தி, சூரை போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் வைட்டமின் D நிறைந்த ஆதாரங்களாகும்.
பால், ஆரஞ்சு பழச்சாறு, ஓட்ஸ் போன்ற தானியங்கள், பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள், சோயா ஆகியவையும் வைட்டமின் டி சிறந்த மூலமாகும்.