பழங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒரு பழம் குறித்து இங்கே காண்போம்.
டிராகன் பழம் நம் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை தரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? ஆம். இதில் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இது ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
ஊட்டச்சத்து விவரம்
டிராகன் பழத்தில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. டிராகன் பழத்தில் பாலிபினால்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டாசயனின்கள் போன்ற தாவர சேர்மங்கள் உள்ளன. மேலும் டிராகன் பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், லைகோபீன் மற்றும் பீட்டாலைன் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. டிராகன் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கே அறிவோம்.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, நீங்கள் டிராகன் பழத்தை உட்கொள்ளலாம்.
சீரான செரிமானம்
டிராகன் பழத்தில் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது நமது செரிமானத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும்.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியம்
டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் கொலாஜனை உற்பத்தி செய்யவும், முடியை வலுப்படுத்தவும், உடைவதைத் தடுக்கவும் உதவும்.
இதய வலிமை
டிராகன் பழத்தில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
சர்க்கரை மேலாண்மை
டிராகன் பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு பழமாகக் கருதப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு டிராகன் பழம் ஒரு நன்மை பயக்கும் பழமாகக் கருதப்படுகிறது.