உடலின் கழிவுகளை மொத்தமாக வெளியேற்ற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். இதற்கு உதவும் டிடாக்ஸ் பானம் வகைகளை பார்க்கலாம்.
உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்ற வீட்டிலேயே எளிமையான முறையில் ஆரோக்கியமான பானம் தயார் செய்து அருந்தலாம்.
தோல் நீக்கிய 1 ஆப்பிள், ஒரு இன்ச் இஞ்சி, எலுமிச்சை சாறு எடுத்து கலந்து மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும்.
பின் இதை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றலாம்.
இது உடலில் கழிவுகள் தேங்காமல் வெளியேறி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது தயார் செய்ய எளிதாக இருப்பதுடன், பருகவும் நன்றாக இருக்கும்.