இத்தூண்டு சுண்டக்காயில இவ்ளோ நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
27 Jun 2024, 09:00 IST

சுண்டைக்காய் வத்தலை விட, அதை பச்சையாக குழம்பு வைத்து சாப்பிடுவது பல நன்மைகளைத் தருகிறது. இது கசப்பான சுவையைத் தருவதாக இருப்பினும், இதன் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன

நீரிழிவு நோய்க்கு

சுண்டக்காயில் கிளைக்கோஸைடு என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகளவு உள்ளது. இவை இன்சுலின் உறிஞ்சுதல் மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்தி இரத்த சர்க்கரை அளவை திடீரென உயராமல் பாதுகாத்துக் கொள்கிறது

வயிறு பிரச்சனைகள் தீர

வயிற்று மந்தம், செரிமான பிரச்சனை, வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு சுண்டக்காய் ஒரு நல்ல தீர்வாக அமைகிறது

எலும்புகளை வலுவாக்க

சுண்டைக்காயில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு தேய்மானத்தைக் குறைக்கவும், எலும்பின் உறுதித்தன்மை இழக்காமல் இருக்கவும் உதவுகிறது

பசியின்மையைப் போக்க

பசி உணர்வு இல்லாமல் இருப்பது அது உடல் நலமின்மையின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதைச் சரிசெய்ய சுண்டக்காய் உதவுகிறது. ஏனெனில் சுண்டக்காய் பசியைத் தூண்டுவதில் சிறப்பாக செயல்படுகிறது

சளியைப் போக்குவதற்கு

சுண்டைக்காயில் சளியைப் போக்கும் தன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, நெஞ்சு சளியை எடுக்கும் ஆற்றல் சுண்டக்காயில் உள்ளது

அனீமியாவைக் குணப்படுத்த

சுண்டக்காயில் உள்ள அதிகளவிலான இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அனீமியா எனும் இரத்த சோகை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது

மலச்சிக்கல் நீங்க

சுண்டைக்காய் உட்கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையைக் குணமாக்குகிறது. பொதுவாக மலச்சிக்கல் உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படலாம். இதை சரி செய்வதற்கு சுண்டக்காய் ஒரு சிறந்த தீர்வாகும்