கொளுத்தும் கோடை வெயிலில் நீரேற்றமாக இருக்க, அதிக திரவம் உட்கொள்ள வேண்டும். இதற்காக நீங்கள் என்னென்ன பானங்களை குடிக்கலாம் என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
தர்பூசணி ஜூஸ்
தர்பூசணியில் 90 சதவீதம் நீர் உள்ளது. இதன் நீரின் உள்ளடக்கம் கோடையில் உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
மோர்
வெயில் காலத்தில் மோர் குடிப்பது உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்தும் குடிக்கலாம்.
மாங்காய் ஜூஸ்
கோடை காலத்தில் மாங்காய் எளிதில் கிடைக்கும். இரண்டு நடுத்தர அளவிலான மாங்காவை நன்கு கழுவி, ஜூஸ் போட்டு குடிக்கவும். இது உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும்.
சியா விதை நீர்
சியா விதைகளை இரவில் நீரில் ஊற வைக்கவும். காலையில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த சியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கவும். இது உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன், உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.
எலுமிச்சை நீர்
கோடையில் நீரேற்றத்துடன், புத்துணர்ச்சியுடனும் இருக்க விரும்புகிறீர்கள் என்றால், எலுமிச்சை நீர் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் சியா விதைகளை கலந்தும் குடிக்கலாம்.
வெள்ளரி ஜூஸ்
நீரேற்றம் மற்றும் குளிர்ச்சி என்று வரும்போது, வெள்ளரி ஜூஸ் முதன்மையாக திகழ்கிறது. கோடையில் தினமும் வெள்ளரி ஜூஸ் குடிக்கலாம்.
இளநீர்
கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க தினமும் காலையில் இளநீர் குடிக்கலாம். இது உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும்.
தண்ணீர்
தினமும் 8 முதல் 10 கப் தண்ணீர் குடிப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலில் உள்ள அழுக்கை வெளியேற்றி, உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும்.