ப்ரிட்ஜ் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... இந்த 6 விஷயங்கள தெரிஞ்சிக்கோங்க!

By Kanimozhi Pannerselvam
10 Feb 2024, 20:30 IST

சூடான உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு முன் முழுவதுமாக சூடு ஆறிவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பலாப்பழம், அன்னாசிப்பழம் போன்ற பழங்களை ப்ரிட்ஜில் சேமித்து வைத்தால், அதன் வாசனை மற்ற உணவுப் பொருட்களிலும் வீசக்கூடும்.

அதிக அளவு மீன் மற்றும் இறைச்சியை ஃப்ரீசரில் அதிக நாட்கள் சேமித்து வைத்தால், அதன் சுவை குறையும். எனவே நான்வெஜ் அயிட்டங்களை ஃப்ரீசரில் சேமித்து வைப்பதை தவிர்ப்பது நல்லது.

அறை வெப்பநிலைக்கு வெளியே எடுத்து, அடிக்கடி உறைந்தால், உணவின் சுவை இழந்துவிடும். தேவையானதை எடுத்து மீண்டும் சூடுபடுத்துவது நல்லது. மீண்டும் சூடுபடுத்தப்பட்ட உணவை மீண்டும் குளிரூட்டக்கூடாது.

குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்யும் போது, ​​எல்லாவற்றையும் வெளியே எடுத்து, சுத்தமான துணியால் துடைக்கும் முன் குளிர்சாதன பெட்டியை அணைக்கவும்.

குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்த சாதத்தை நிச்சயம் 5 நிமிடங்களுக்கு சூடுபடுத்த வேண்டும்.