பழ வகைகளில் சிறிய நெல்லிக்காய் அனைவரும் விரும்பி எடுத்துக் கொள்ளும் பழமாகும். இதில் சிறு நெல்லிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
ஊட்டச்சத்துக்கள்
இதில் அதிகளவிலான வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மிகி அளவிலான வைட்டமின் சத்துக்கள் உள்ளது. மேலும், இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை காணப்படுகின்றன
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு
குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது
இரத்த சோகையைத் தடுக்க
சிறு நெல்லிக்காயில் பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த சோகைக்கு மருந்தாக பயன்படுகிறது
உடல் சூடு குறைய
நெல்லிக்காயை மோரில் முந்தைய நாள் இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து குளித்து வர உடல் சூடு தணிவதுடன், கண் பார்வை தெளிவாகும், மேலும் பொடுகு பிரச்சனை முடி உதிர்வு பிரச்சனைக்கு உதவுகிறது
சர்க்கரை நோயாளிகளுக்கு
சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்காயை எடுத்துக் கொள்வது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது
பித்தம் குறைய
பலரும் தலைசுற்றல், மயக்கம், வாந்தி, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட சிறிய நெல்லிக்காய் உதவுகிறது
சிறிய நெல்லிக்காயை உட்கொள்வது உடல் நலத்திற்கு இது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது