நீங்க போதுமான அளவு சாப்பிடாவிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

By Kanimozhi Pannerselvam
18 Feb 2024, 10:13 IST

முடி உதிர்வு

குறைந்த கலோரி உட்கொள்ளல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி உதிர்தல் ஏற்படலாம்.

பசி

நீங்கள் போதுமான அளவு சாப்பிடாத போது தொடர்ந்து பசி எடுத்துக்கொண்டே இருக்கும். இந்த பசியானது உங்களை எந்த வேலையிலும் கவனம் செலுத்தவிடாது.

பசியுடன் எழுவது

பசியுடன் எழுந்திருப்பது, பிற்பகல் 12 மணிக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆவல் அதிகரிப்பது போன்றவை உடலுக்குத் தேவையான அளவு உணவு கிடைக்கவில்லை என்பதை உணர்த்தக்கூடிய அறிகுறிகளாகும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் அல்லது அடிக்கடி குடல் இயக்கங்கள் நீங்கள் போதுமான அளவு சாப்பிடவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

எரிந்து விழுவது

எரிச்சல் மற்றும் மனச்சோர்வு உணர்வு போதுமான கலோரி உட்கொள்ளல் மற்றொரு பொதுவான அறிகுறியாகும்.

சோர்வு

ஒருவர் மிகவும் குறைவான அளவில் சாப்பிட்டதை குறிக்கக்கூடிய வெளிப்படையான அறிகுறியாக சோர்வு உள்ளது. தேவையான கலோரிகளை விடக் குறைவான கலோரிகளை உட்கொள்பவர்கள் சின்ன சின்ன வேலைகளைக்கூட செய்யமுடியாமல் சோர்வாக உணர்வார்கள்.

இந்த அறிகுறிகளும் தோன்றும்

முகப்பரு, அடர்த்தி குறைந்த தலைமுடி மற்றும் பலவீனமான விரல் நகங்கள் ஆகியவையும் ஒருவர் சரியான அளவு கலோரிகளை உட்கொள்ளவில்லை என்பதை குறிக்கிறது.