வெஸ்டர்ன் டாய்லட் பயன்படுத்துவதன் தீமைகள்!!

By Devaki Jeganathan
11 Sep 2024, 10:47 IST

அனைத்து வீடுகளிலும் வெஸ்டர்ன் டாய்லட் எனப்படும் மேற்கத்திய கழிப்பறைகளை பயன்படுத்தும் மோகம் அதிகரித்துள்ளது. இந்த வகை கழிவறைகளை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா? வெஸ்டர்ன் டாய்லட் தீமைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

மலச்சிக்கல்

வெஸ்டர்ன் டாய்லெட்டின் உட்காரும் நிலை, கழிவுகளை முற்றிலுமாக அகற்றுவதை கடினமாக்குகிறது. இது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். மலச்சிக்கல் மூல நோயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகும்.

குடல் புற்றுநோய்

வெஸ்டர்ன் டாய்லட்களை பயன்படுத்தி மலம் கழிக்கும் போது, இரைப்பை மற்றும் சொரிமான மண்டலத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக, குடல் புண் மற்றும் குடல் புற்றுநோய் அபாயம் ஏற்படும்.

வயிற்று பிரச்சனைகள்

மேற்கத்திய கழிப்பறைகள் வயிறு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. வெஸ்டர்ன் டாய்லட்யில் நாம் நாற்காலியில் அமர்வது போல் தான் அமர்கிறோம். இதனால், குடல் பகுதியில் ஏற்படும் முடிச்சுக்கள் செரிமான பாதையில் சேதத்தை ஏற்படுத்தும்.

சிறுநீர் பிரச்சினை

மேற்கத்திய கழிப்பறையைப் பயன்படுத்துவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் (UTIs) அபாயத்தை அதிகரிக்கும். வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்தும் போது ஒரு சிறிய துண்டு காகிதம் அல்லது மலம் யோனிக்குள் சென்றால், அது தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.

தொற்று நோய்

வெஸ்டர்ன் டாய்லட்களை பயன்படுத்துகையில் நாம் டாய்லட் காகிதங்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். கழிப்பறை பேசின்களை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்தும் இந்த காகிதங்கள், கிருமி தொற்றுக்கும் வழிவகுக்கும்.

மூட்டு பிரச்சனை

வெஸ்டர்ன் டாய்லட்களை அதிகம் பயன்படுத்துவதால், மூட்டு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். இவற்றை பயன்படுத்தும் போது கிடைக்கும் சௌகரியம், மூட்டு பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போடும்.

பிரசவ பிரச்சனை

கர்ப்பிணிகள், வெஸ்டர்ன் டாய்லட்களை பயன்படுத்துவதால் சுக பிரசவத்திற்கான வாய்ப்புகள் குறையும். இதன் பயன்பாடு கருப்பையில் ஏற்படுத்தும் அழுத்தம் பிரசவ பிரச்சனைகளை உண்டாக்கும்.

சுகாதாரம்

இருக்கை போன்று காணப்படும் வெஸ்டர்ன் டாய்லட்ளை பயன்படுத்தும் போது, நம் உடலின் பெரும்பகுதி கழிப்பறை பேசினை தொடுகிறது. இது கிருமிகளின் தொற்றுக்கு வழிவகுக்கிறது. அது மட்டும் அல்ல, அனைவரும் ஒரே கழிப்பறையை பயன்டுத்துவது இன்னும் ஆபத்து.