நிம்மதியான தூக்கத்தை பெற யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தூங்குவார்கள். அந்தவகையில், நம்மில் பெரும்பாலானோர் குப்புறப்படுத்து தூங்குவோம். அது தீய பழக்கம் என்பது உங்களுக்கு தெரியுமா? குப்புறப் படுத்துத் தூங்குவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்க்கலாம்.
முதுகு வலி
குப்புற படுத்து தூங்குவது உங்கள் முதுகில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு, கழுத்து மற்றும் முதுகுவலி தொடர்ந்து காணப்படும். மேலும், போதுமான அளவு தூங்கினாலும், அடுத்த நாள் சோர்வாக உணர்வீர்கள்.
கழுத்து வலி
இரவில் குப்புற படுத்து தூங்குவது தலை மற்றும் முதுகுத்தண்டு வரிசையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இரவு முழுவதும் இந்த நிலையில் தூங்குவதன் மூலம் கழுத்து வலி பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தலைவலி
குப்புற படுத்து தூங்குவதால் கழுத்து வளைந்து, தலைக்கு ரத்தம் சரியாக செல்லாது. இதனால், தலைவலியை ஏற்படுத்தும்.
வயிற்று வலி
இரவில் குப்புற படுத்து தூங்குவதால், உணவு சரியாக ஜீரணமாகாது. இதன் காரணமாக நீங்கள் வயிற்று வலியை உணரலாம்.
மார்பக பிரச்சினை
குப்புற படுத்து தூங்குவது பெண்களின் மார்பகத்தை பாதிக்கும். நீண்ட நேரம் இப்படி தூங்கினால் மார்பகத்தில் அழுத்தம் கொடுத்து வலியை உண்டாக்கும்.
தோல் பிரச்சினை
இரவு முழுவதும் குப்புற படுத்து தூங்குவது முகத்தையம் பாதிக்கும். இதன் காரணமாக சருமத்திற்கு சரியான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் முகத்தில் சுருக்கங்கள், பருக்கள் போன்றவை தோன்ற ஆரம்பிக்கும்.