ஒரு மாசத்துக்கு காலை உணவை தவிர்த்தால் என்னவாகும் தெரியுமா?
By Kanimozhi Pannerselvam
04 Oct 2024, 12:00 IST
மன அழுத்தம்
ஒரு மாதம் ப்ரேக்ஃபாஸ்ட் தொடர்ந்து எடுக்காவிட்டால், செரோடோனின் நிலைகள் பாதிப்படைகின்றன. இதன் காரணமாக மன அழுத்தம், கவலை, அமைதியின்மை போன்ற மனநலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
எடை அதிகரிப்பு
காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றன. ஏனெனில் காலை உணவை தவிர்ப்போர் பசி காரணமாக அதிக நொறுக்குத்தீனிகள் மற்றும் துரித உணவுகளைச் சாப்பிடுவார்கள்.
காலை உணவைஎடுக்காதது மெட்டாபாலிக் சிண்ட்ரோம் அபாயத்தை அதிகரிக்கிறது. இது மாரடைப்பு, ஸ்ட்ரோக், டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.
டைப் 2 டயாபெட்டீஸ்
காலை உணவை புறக்கணிப்பது, நீரழிவு நோயை வரவேற்பதற்கு சமமானது. காலை உணவு சாப்பிடாதவர்களின் உடலில் இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு இருக்காது. இது நீரிழிவு அபாயத்திற்கு வழிவகுக்கிறது.
ஊட்டச்சத்து பற்றாக்குறை
காலை உணவு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதனை எடுக்காவிட்டால், நமது உடலுக்கு வைட்டமின்கள், மினரல்ஸ், நார்ச்சத்து போன்ற தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததோடு, இது பல நோய்களுக்கும் காரணமாக மாறும்.