டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பதன் தீமைகள்!

By Devaki Jeganathan
02 Mar 2025, 17:48 IST

நம்மில் பலர் காலையில் தேவைக்கு அதிகமாக டீ தயாரித்து வைத்து. தேவைப்படும் போதெல்லாம் அதை சூடு படுத்தி குடிப்போம். இப்படி செய்வது மிகவும் ஆபத்தானது என்பது உங்களுக்கு தெரியுமா? டீயை ஏன் மீண்டும் சூடுபடுத்தி குடிக்கக் கூடாது என பார்க்கலாம்.

பாக்டீரியா வளர்ச்சி

டீ தயாரிக்கப்படும் போது, ​​அது நன்றாக இருக்கும். ஆனால், அது குளிர்ந்தவுடன் தேநீரில் பாக்டீரியா உருவாக தொடங்கும். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

தீங்கு விளைவிக்கும்

குளிர்ந்த டீயை சூடுபடுத்தும் போது, ​​அதில் உள்ள பாக்டீரியாக்கள் தேநீரில் கரைந்துவிடும். இதை குடிப்பதால் பாக்டீரியா குடலைச் சென்று தீங்கு விளைவிக்கும்.

செரிமான பிரச்சனை

டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பதால், அசிடிட்டி, வாயு, வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

டீயை மீண்டும் சூடாக்க வேண்டாம்

டீ ஆறியவுடன், அதில் உள்ள நல்ல நொதிகள் அழிந்து, மீண்டும் சூடு செய்து குடித்தால், அது விஷமாகிறது.

சுவை மாற்றம்

டீயில் உள்ள மூலப்பொருள்கள் குடிப்பதற்கு சுவையாக இருக்கும். ஆனால், அதை மீண்டும் சூடுபடுத்துவதால், அதன் சுவையில் கசப்பு ஏற்படுகிறது. இது சுவையை கெடுப்பது மட்டுமல்லாமல் வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

கூடுதல் குறிப்பு

ஆராய்ச்சியின் படி, தேநீர் தயாரித்து 15 நிமிடங்கள் கடந்துவிட்டால், நீங்கள் அதை சூடாக்கி குடிக்கலாம். ஆனால், அதற்கும் தாமதமாகிவிட்டால், அதை மீண்டும் சூடாக்கி குடிக்க வேண்டாம்.