இரவு உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

By Kanimozhi Pannerselvam
07 Jan 2024, 11:42 IST

தூக்கம்

உறக்க செல்லுவதற்கு முன்பு இரவு உணவு அருந்துவதே ஆபத்தானது. இந்நிலையில் சிலர் இரவு உணவு சாப்பிட்ட கையோடு இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தூக்கத்தை சீர்குலைக்கிறது.

செரிமான பிரச்சனை

ரீச்சான க்ரீம், வெண்ணெய், அதிக அளவிலான சர்க்கரை கொண்ட இனிப்பு வகைகளை இரவில் சாப்பிடுவது வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பல் ஆரோக்கியம்

அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகளை வழக்கமாக உட்கொள்வது பல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்

மன அழுத்தம்

இனிப்புகளை உட்கொள்வதால் இரத்த சர்க்கரையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும்

இனிப்பு மீது அதீத விருப்பம்

இரவு உணவிற்குப் பிறகு தொடர்ந்து இனிப்புகளை உட்கொள்வது இனிப்பு உணவுகள் மீது தீவிரமான பசிக்கு வழிவகுக்கும்

உடல் எடை

சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள இனிப்பு வகைகளின் அதிகப்படியான நுகர்வு எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கும்.