மக்கானா என்பது தாமரை விதைகள் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இதை அதிகளவில் உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
எடை அதிகரிப்பு
மற்ற தின்பண்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த கலோரி இருந்தாலும், அதிக கலோரி உணவுகளுடன் மக்கானாவை அதிக அளவில் உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கிறது
செரிமான பிரச்சனைகள்
மக்கானாவை அதிகமாக உட்கொள்வதால் வாயு, அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சரியாக மென்று சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது
இரத்த சர்க்கரை அதிகரிப்பு
மக்கானாவின் கிளைசெமிக் குறியீடு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பினும், ஒரே நேரத்தில் அதிகளவு மக்கானாவை சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது
ஊட்டச்சத்து சமநிலையின்மை
மக்கானாவில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனினும் மற்ற உணவுப் பொருட்களை சரிவிகித அளவில் எடுத்துக் கொள்ளாமல், அதிக அளவில் உட்கொள்வது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது
அதிகளவு சோடியம்
சந்தையில் கிடைக்கும் சில மக்கானாக்களில் உப்பு கலந்திருக்கலாம். இதை அதிகளவு உட்கொள்வது உடலில் அதிகப்படியான சோடியம் பிரச்சனையை ஏற்படுத்தலாம்
சிறுநீரகக் கற்கள்
மக்கானாவில் ஆக்சலேட்டுகள் நிறைந்துள்ளது. இதை அதிகளவு உட்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உருவாகலாம்