குறைந்த கலோரி சிற்றுண்டியான மக்கானா பெரும்பாலான உடற்பயிற்சி ஆர்வலர்களின் விருப்பம். ஏனென்றால், எவ்வளவு பெரிய பசியாக இருந்தாலும், கொஞ்சம் மக்கானா சாப்பிட்டால் போதும் பசி முழுவதும் கட்டுப்படும். என்னதான் மக்கானா பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் அதிகமா சாப்பிட்டால் தீங்கு தான்.
மலச்சிக்கல் பிரச்சனை
தாமரை விதைகளை சாப்பிடுவது மிகவும் லேசானது. ஆனால், அதன் அதிகப்படியான நுகர்வு மலச்சிக்கலை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகப்படியான நார்ச்சத்து உட்கொள்வது குடலின் செயல்பாட்டை பாதிக்கிறது. இது வாயுத்தொல்லையை ஏற்படுத்துகிறது.
கால்சியம் குவிப்பு
தாமரை விதைகளை அதிகமாக உட்கொள்வது எலும்புகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் கால்சியம் படிவை அதிகரிக்கும். இதன் காரணமாக பல் காயங்கள், தோல் வெடிப்புகள், சிறுநீரக கற்கள் மற்றும் கரோனரி தமனி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
உயர் இரத்த அழுத்தம்
மக்கானாவில் பொட்டாசியம் உள்ளது. ஆனால், நிரம்பிய மக்கானாவில் கூடுதல் உப்பு உள்ளது. இது இரத்த அழுத்த அளவை அதிகரிக்கும். இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
ஒவ்வாமை ஏற்படும்
சிலர் மக்கானா சாப்பிடுவதால் ஒவ்வாமையை எதிர்கொள்ள நேரிடும். காய்ச்சல், இருமல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை. இது தவிர, தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயமும் இருக்கலாம்.
எடை அதிகரிக்கும்
மக்கானா ஒரு குறைந்த கலோரி சிற்றுண்டி என்பது உண்மைதான். ஆனால், அதன் அதிகப்படியான நுகர்வு எடையையும் அதிகரிக்கும்.
எவ்வளவு மக்கானா சாப்பிடணும்?
தினமும் ஒரு கைப்பிடி மக்கானாவை தேநீர் அல்லது பாலுடன் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது தவிர, உடலில் பல நேர்மறையான விளைவுகள் காணப்படுகின்றன.
மக்கானாவை யார் சாப்பிடக்கூடாது?
உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால் மக்கானாவை உட்கொள்ளவே வேண்டாம். இதில் சிறுநீரக கற்களின் அளவை அதிகரிக்கக்கூடிய கால்சியம் உள்ளது. உங்களுக்கு சளி, வயிற்றுப்போக்கு அல்லது பொதுவான காய்ச்சல் இருந்தால் மக்கானா சாப்பிட வேண்டாம்.