கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் வைட்டமின்கள், புரதம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்
நன்மைகள்
இது எடை இழப்பு, இரத்த சோகை, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். எனினும், இதை அதிகளவு உட்கொள்வது சில சமயங்களில் தீங்கு விளைவிக்கலாம்
குறைந்த இரத்த சர்க்கரை
கறிவேப்பிலையில் அதிகளவு சோடியம் உள்ளது. இது இரத்தச் சர்க்கரைக் குறைவு தன்மை கொண்டதாகும். இதனை அதிகப்படியாக உட்கொள்வது அதிகப்படியான இரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்தலாம்
ஒவ்வாமை எதிர்வினைகள்
சிலருக்கு கறிவேப்பிலை ஒவ்வாமையும் ஏற்படலாம். இதனால், தோல் வெடிப்பு, மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு
அஜீரணம்
அதிகப்படியான கறிவேப்பிலை உட்கொள்ளல் வீக்கம், வாயு அல்லது அஜீரணத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களுக்கு செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்
மத்திய நரம்பு மண்டல பாதிப்பு
கறிவேப்பிலையில் ஆல்கலாய்டுகள் உள்ளது. இதை அதிகளவில் உட்கொள்வதால் மத்திய நரம்பு மண்டலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்
சிறுநீரகக் கற்கள்
சிறுநீரக கற்கள் பிரச்சனை கொண்டவர்கள் கண்டிப்பாக கறிவேப்பிலை உட்கொள்ளலை குறைக்க வேண்டும்