மோமோஸ் சாப்பிட்டா இந்த பிரச்சனைகள் எல்லாம் வருமாம்

By Gowthami Subramani
12 Mar 2024, 14:24 IST

மோமோஸ் இன்று பலரும் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருளாகும். எனினும் அதிகளவு மோமோஸ் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கலாம்

நீரிழிவு நோய்

இது வணிகரீதியாக தயாரிக்கப்படக்கூடிய மைதாவில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்

வயிறு தொற்று

மோமோஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மற்றும் இதன் சட்னி கடுமையான குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதால், வயிற்று தொற்றை ஏற்படுத்துகிறது

மூலவியாதி

மோமோஸூடன் அதிகப்படியான மிளகாய் சேர்ந்த அமைப்பானது இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். இது பைல்ஸ் என அழைக்கப்படுகிறது

நரம்பு கோளாறு

மோமோஸில் மோனோசோடியம் குளுட்டமேட் என்ற பொருள் நிறைந்துள்ளது. இது மார்பு வலி, நரம்பு கோளாறுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது