கோடை காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். உடலுக்கு சூடு என நாம் நினைக்கும் பலாப்பழத்தை வெயில் காலத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்து என பார்க்கலாம்.
எடை அதிகரிப்பு
பலாப்பழத்தில் அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால், அதை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
செரிமானப் பிரச்சனை
சிலருக்கு பலாப்பழம் செரிமானப் பிரச்சனை, வயிற்றுப்போக்கு, வயிறு உப்புதல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
ஒவ்வாமை
பலாப்பழம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
சர்க்கரை அளவு
பலாப்பழத்தில் சர்க்கரை அளவு அதிகம் என்பதால், சர்க்கரை நோயாளிகள் அதை மிதமாக உட்கொள்ள வேண்டும்.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், அறுவை சிகிச்சைக்கு முன் அல்லது பின் பலாப்பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிறுநீரக பிரச்சினைகள்
சிறுநீரக பிரச்சினைகள் உள்ள நபர்கள் பலாப்பழத்தைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதன் அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் ஹைபர்கலீமியா எனப்படும் ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும்.