அதிகமாக டீ குடிப்பவரா நீங்கள்? உஷார்.!

By Ishvarya Gurumurthy G
15 Feb 2024, 14:35 IST

டீ இல்லாமல் நமது நாள் ஓடாது. ஆனால் இதை அதிகமாக குடித்தால் பல பக்கவிளைவுகள் ஏற்படும். அப்படி என்ன ஆகும் எனப்தை இங்கே காண்போம்.

மூட்டு வலி

அதிகமாக டீ குடிப்பதால் கீல்வாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இதனால் மூட்டு வலி ஏற்படும்.

எலும்பு பாதிப்பு

எலும்பை வலுப்படுத்த டீ உதவலாம். ஆனால் இதை அதிகமாக குடிக்கும் போது எலும்பு பாதிக்கப்படும்.

பற் சிதைவு

நீங்கள் அதிகமாக டீ குடிக்கும் போது பற் சிதைவு ஏற்படும். மேலும் பற்களில் கரை ஏற்படுவதற்கும் இது காரணமாக திகழும்.

புற்றுநோய் அபாயம்

அதிகமாக டீ குடிப்பதால், உணவுக் குழாய் மற்றும் புராஸ்டேட் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

எடை அதிகரிக்கும்

பால் டீயில் சர்க்கரை சேர்த்து குடிக்கின்றோம். ஒரு முறை என்றால் சரி. ஆனால், இதை அதிகமாக எடுக்கும் போது, உடல் எடை அதிகரிக்கும்.