காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது எவ்வளவு ஆபத்து தெரியுமா?

By Devaki Jeganathan
19 Jan 2024, 06:49 IST

குளிர்காலத்தில் வெந்நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், அதிகப்படியான சூடான நீரை உட்கொண்டால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதன் தீமைகள் பற்றி பார்க்கலாம்.

உடலில் நீர் பற்றாக்குறை

வெந்நீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால், உதடுகள் வறண்டு போவதோடு, தலைவலி மற்றும் கால்களிலும் வலி ஏற்படும்.

கவன குறைவு

வெந்நீரைக் குடிப்பதால் மூளையின் நரம்புகள் மற்றும் செல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நீங்கள் எதிலும் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.

தூக்கமின்மை

அதிக சூடான நீரை உட்கொள்வது தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இது உங்கள் இரவு தூக்கத்தை பாதிக்கிறது.

நரம்புகளில் வீக்கம்

பல சமயங்களில் தாகம் எடுக்காமல் இருக்கும் போது வெந்நீரை உட்கொள்வது மூளை நரம்புகளில் வீக்கத்தை உண்டாக்குவதுடன் தலைவலியையும் உண்டாக்கும்.

சிறுநீரக பிரச்சினை

ஒருபுறம் வெந்நீர் உடலை நச்சு நீக்க உதவுகிறது. ஆனால், மறுபுறம் அதன் அதிகப்படியான நுகர்வு சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சிறுநீரக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உணவு குழாய் வெடிப்பு

வெந்நீர் குடிப்பதால் உணவுக்குழாயில் வெடிப்பு ஏற்படலாம். அதாவது, நீங்கள் சாப்பிடுவதில் சிரமம் மற்றும் தொண்டையில் எரியும் உணர்வு ஏற்படலாம்.

மலச்சிக்கல்

அதிக சூடான நீரை உட்கொள்வது மலச்சிக்கலை ஏற்படுத்தும். இது மலத்தை கடினமாக்குகிறது.