இரவில் நிர்வாணமாக தூங்குவதால் ஏற்படும் தீமைகள்!

By Devaki Jeganathan
15 May 2025, 23:12 IST

அனைவரும் நிம்மதியான ஆரோக்கியமான தூக்கத்தை விரும்புவார்கள். நம்மில் பலர், இரவில் வசதிக்காக ஆடை இல்லாமல் தூங்க விரும்புகிறார்கள். ஆனால் அதன் தீமைகள் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதை பற்றி இங்கே பார்க்கலாம்.

சிறுநீர் பிரச்சனை

இரவில் ஆடையின்றி தூங்குவதால் சிறுநீரை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும். இந்நிலையில், நீங்கள் ஆடை இல்லாமல் தூங்குவது நல்லதல்ல.

தோல் தொற்று

ஆடைகள் இல்லாமல் தூங்குவது பெரும்பாலும் தோல் நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. படுக்கை துணி உங்கள் சருமத்திற்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும்.

மாதவிடாய் பிரச்சினை

இரவில் ஆடை இல்லாமல் தூங்குவது, மாதவிடாய் முன்னதாகவே வருவதற்கு வழிவகுக்கும். மாதவிடாய் காலத்தில் நீங்கள் நிர்வாணமாக தூங்கினால், உங்கள் படுக்கை வீணாகலாம். எனவே, மாதவிடாய் தேதியை நிச்சயமாக நினைவில் கொள்ளுங்கள்.

சளி மற்றும் இருமல்

இரவில் ஏசியை ஆன் செய்துவிட்டு, ஆடையின்றி தூங்கினால், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படலாம். ஆடை இல்லாமல் தூங்கும் போது உங்கள் உடல் சூடு முற்றிலும் குறையும்.

சுகாதார பிரச்சினை

ஆடை இல்லாமல் படுக்கையில் தூங்குவது உங்கள் சுகாதாரத்தை மோசமாக பாதிக்கிறது. இதன் காரணமாக, உங்கள் அந்தரங்க உறுப்புகளில் உள்ள அழுக்குகள் உங்கள் முழு உடலையும் பாதிக்கும்.

வியர்வை பிரச்சனை

ஆடையின்றி உறங்கினால், உங்களின் வியர்வை அனைத்தும் பெட் ஷீட்டிலேயே இருக்கும். இது உங்கள் தூக்கத்தை கெடுக்கலாம். இந்நிலையில், தளர்வான சட்டை அணிந்து தூங்குங்கள்.

துர்நாற்றம்

நிர்வாணமாக உறங்குவது உங்கள் படுக்கையில் வியர்க்க வைக்கும். இதன் காரணமாக, உங்கள் படுக்கையில் துர்நாற்றம் ஏற்படலாம் மற்றும் உங்கள் தூக்கம் தொந்தரவு செய்யலாம்.