சீத்தாப்பழம் சாப்பிட்டா இந்த பிரச்சனைகள் உங்களை நெருங்காது

By Gowthami Subramani
22 Jan 2025, 13:33 IST

சர்க்கரை ஆப்பிள் என்றழைக்கப்படும் சீத்தாப்பழம் சுவையுடன் கூடிய சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆதரிக்கிறது

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த

சீத்தாப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது. இது மலச்சிக்கல்லைத் தடுக்கவும், சீரான குடல் நுண்ணுயிரியை ஆதரிக்கவும், குடல் செயல்பாட்டை பராமரிக்கவும் உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் வழக்கமான நுகர்வு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபடவும் உதவுகிறது

இயற்கையான ஆற்றலைத் தர

சீத்தாப்பழத்தில் உள்ள குளுக்கோஸ், பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் விரைவான, நீடித்த ஆற்றலை வழங்குகிறது. இயற்கையாகவே ஆற்றலை உயர்த்த சீதாப்பழம் ஒரு சிறந்த சிற்றுண்டித் தேர்வாக அமைகிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

சீத்தாப்பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது. இது எலும்பு அடர்த்தி, வலிமையை அதிகரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சரும ஆரோக்கியத்தில் பங்களிக்கிறது. இந்த வைட்டமின் ஏ சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், முதுமை அறிகுறிகளைத் தவிர்க்கவும், ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது