சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மறைந்திருக்கும் அற்புத நன்மைகள்

By Gowthami Subramani
29 Dec 2023, 12:19 IST

பொதுவாக பருவகால காய்கறிகள் காலநிலைக்கு ஏற்ப பல வழிகளில் நன்மையைத் தருகின்றன. அதில் ஒன்றே சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகும். குளிர்காலத்தில் இனிப்பு உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

இதில் வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மையைத் தருகின்றன

தசைகளை வலுப்படுத்த

வலுவான தசையைப் பெற விரும்புவோர் இனிப்பு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள பீட்டா கரோட்டீன், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்சி போன்றவை தசைகளை வலுப்படுத்த உதவுகிறது

கண் ஆரோக்கியத்திற்கு

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவை கண்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மேலும் இது கிளைகோமாவின் அபாயத்தைக் குறைக்கிறது

முடி ஆரோக்கியத்திற்கு

கூந்தல் ஆரோக்கியத்திற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கை எடுத்துக் கொள்ளலாம். இது கெரடினை ஊக்குவிக்கிறது

சரும ஆரோக்கியத்திற்கு

தோல் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்கசர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. மேலும், சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது

கோபத்தைக் கட்டுப்படுத்த

கார்டிசோல் என்ற ஹார்மோன் உடலில் மன அழுத்தத்தை ஊக்குவிக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த கார்டிசோல் அளவைக் குறைக்கலாம்

இவை அனைத்தும் குளிர்காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளே. இதிலிருந்து விடுபட உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு குளிர்கால சூப்பர் ஃபுட்டாக உட்கொள்ளலாம்