கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சில ஆரோக்கியமான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் கோடை வெப்பத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள் சிலவற்றைக் காணலாம். இது சுவையுடன் கூடிய நீரேற்றத்தையும், குளிர்ச்சியையும் தருகிறது
வெள்ளரி, எலுமிச்சை சாறு
இந்த நச்சு நீக்கும் பானம் உடலை அமைதிப்படுத்துகிறது. மேலும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. ஈரப்பதமான நாட்களில் உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது
பெல் ஜூஸ்
இது செரிமான பண்புகள் மற்றும் குளிர்ச்சியூட்டும் பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்ற சாறு ஆகும். எனவே தான் இது கோடைக்காலத்திற்கு அவசியமான பானமாக அமைகிறது. குறிப்பாக, வட இந்தியாவில் இது மிகவும் புகழ்பெற்றதாகும்
தர்பூசணி சாறு
இது அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட இனிப்பு மற்றும் ஜூசி பானம் ஆகும். இந்த பானம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன், உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது
ஆரஞ்சு சாறு
ஆரஞ்சு சாறு வைட்டமின் சி மற்றும் இயற்கை சர்க்கரைகளால் நிரம்பிய சிட்ரஸ் வகை பானமாகும். இவை உடலை விரைவாக உற்சாகப்படுத்துகிறது
புதினா மோர்
புதினா மற்றும் சீரகம் கொண்ட இந்த புரோபயாடிக் நிறைந்த கோடை பானம் குடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகிறது. மேலும் இவை நீரிழப்பைத் தடுக்கிறது