சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து எஸ்கேப் ஆக தினமும் காலையில் இதை குடிக்கவும்..

By Ishvarya Gurumurthy G
20 Mar 2025, 15:49 IST

கொளுத்தும் வெயிலில் இருந்து நிவாரணம் பெற விரும்பினால், தினமும் காலையில் இந்த பானங்களை குடியுங்கள்.

தர்பூசணி ஜூஸ்

கோடை காலத்தில் சந்தையில் தர்பூசணியை எளிதாகக் காணலாம். நீங்கள் தர்பூசணி ஜூஸ் தயாரித்து குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். குளிர்ந்த தர்பூசணி ஜூஸ் கோடை காலத்தில் உங்களுக்கு நிச்சயமாக நிவாரணம் அளிக்கும்.

மாங்காய் ஜூஸ்

சுட்டெரிக்கும் வெயில் மற்றும் வெப்ப அலையைத் தவிர்க்க, நீங்கள் மாங்காய் ஜூஸ் குடிக்கலாம் . இதை உருவாக்குவது மிகவும் எளிது. அதைச் செய்த பிறகு, நீங்கள் அதை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம். குளிர்ந்த மாங்காய் ஜூஸ் குடிக்க மிகவும் சுவையாக இருக்கும்.

வில்வம் ஜூஸ்

கோடையில் மட்டும் கிடைக்கக்கூடிய வில்வம் பழம், உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வில்வம் ஜூஸ் குடிக்கலாம்.

ஆரஞ்சு ஜூஸ்

கோடை வெயிலில் இருந்து காக்க ஆரஞ்சு ஜூஸ் உதவும். இது உங்களுக்கு குளிர்ச்சியை தரும். மேலும் இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நீர் மோர்

வெயிலில் நீங்கள் குடிக்க வேண்டிய முக்கியமான பானம் நீர் மோர். இது உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

லெமன் ஜூஸ்

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எலுமிச்சை உங்களுக்கு பெரிய அளவில் உதவலாம்.

இளநீர்

கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க தினமும் இளநீர் குடிக்கவும். இது உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.