கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைப்பது அவசியமாகும். அவ்வாறு உடலை நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. எனினும், வெள்ளரிக்காயை எப்போது சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்
உடல் ஆரோக்கியத்திற்கு
கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய் உட்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது சரும ஆரோக்கியத்திற்கும் பளபளப்பைத் தருகிறது
தீமைகள்
எந்த ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும், அதைச் சாப்பிடும் விதம் மற்றும் சாப்பிடக்கூடிய நேரம் இரண்டுமே அவசியமாகும். இல்லாவிடில், அது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பைத் தரலாம்
இரவில் வெள்ளரிக்காய்
பகலில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இது பல வகையான உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் தருகிறது. ஆனால், இதை இரவில் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம்
ஏன் தெரியுமா?
வெள்ளரிக்காய் அதிகளவு நீர் மற்றும் குளிர்ச்சித் தன்மையை அளிக்கக் கூடியதாகும். எனவே இரவில் இதை சாப்பிடுவது கப தோஷத்தின் பிரச்சனையை அதிகரிக்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனைகளைத் தரலாம்
மெதுவான செரிமானம்
இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால், செரிமானம் மெதுவாக்கப்பட்டு, வாயு, அஜீரணம் மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
தூக்கத்தில் பாதிப்பு
இரவில் வெள்ளரிக்காயைத் தொடர்ந்து சாப்பிடுவது தூக்க ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்
குறிப்பு
வெள்ளரிக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சிறந்த காய்கறியாகும். எனினும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது