குங்குமப்பூ பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதாகும். இதை பால், கீர் அல்லது இனிப்பு வகைகளில் சேர்த்து சாப்பிடலாம். குங்குமப்பூவில் தேநீர் தயார் செய்து அருந்தலாம். இதில் குங்குமப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
எடையைக் குறைக்க
வெறும் வயிற்றில் குங்குமப்பூ தேநீர் அருந்துவது பசியைக் குறைத்து கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமானத்தை மேம்படுத்துகிறது
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
குங்குமப்பூவில் வைட்டமின் பி, சி மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது
இரத்த அழுத்தத்தைக் குறைக்க
குங்குமப்பூவில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
செரிமானத்தை மேம்படுத்த
குங்குமப்பூ டீ அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தவும், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவுகிறது
தூக்கத்தை மேம்படுத்த
குங்குமப்பூவில் சஃப்ரானல் போன்ற அமைதிப்படுத்தும் சேர்மங்கள் உள்ளது. படுக்கைக்கு முன்னதாக குங்குமப்பூ டீ குடிப்பது மனம் மற்றும் உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. இவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், தூக்கமின்மை அல்லது அமைதியின்மையைக் குறைக்கவும் வழிவகுக்கிறது
சரும ஆரோக்கியத்திற்கு
குங்குமப்பூவில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், கறைகளைக் குறைக்கவும் உதவுகிறது