புதினா தண்ணீர்
கோடையில் புதினா தண்ணீர் குடிப்பது உடலை குளிர்விக்கவும், செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதில் கோடைக்காலத்தில் தினமும் ஏன் புதினா நீர் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காணலாம்
உடலை குளிர்ச்சியாக வைக்க
புதினா குளிர்ச்சியூட்டும் விளைவைக் கொண்டதாகும். இது கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது
வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்க
தினமும் புதினா தண்ணீர் குடிப்பது உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது உடலை புத்துணர்ச்சியுடனும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
புதினாவில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க
புதினா தண்ணீரை தொடர்ந்து குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே இது உடல் எடையிழப்புக்கு ஏற்றதாக அமைகிறது
செரிமானத்தை மேம்படுத்த
புதினா நீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தி, வாயு மற்றும் அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய பானமாகும்
சரும ஆரோக்கியத்திற்கு
புதினா இலைகளில் வைட்டமின் ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் உள்ளது. இவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதை தொடர்ந்து குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி, சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது
தயாரிக்கும் முறை
1 குடம் தண்ணீரில் புதிய புதினா இலைகள், அரை எலுமிச்சை மற்றும் 4 முதல் 5 மெல்லிய வெள்ளரிக்காய் துண்டுகளைச் சேர்த்து, இந்த தண்ணீரை 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கலாம். இப்போது இந்த தண்ணீரை நாள் முழுவதும் குடிக்கலாம்