சம்மரில் வெப்பத்தைத் தணிக்க இந்த ஒரு ஜூஸ் குடிங்க போதும்

By Gowthami Subramani
31 Mar 2025, 18:48 IST

வெண்பூசணிக்காய் மருத்துவ குணங்கள் மற்றும் மகத்தான ஊட்டச்சத்து நன்மைகள் நிறைந்ததாகும். இந்த குளிர்ச்சிமிக்க வெண்பூசணிக்காய் சாற்றை கோடைக்காலத்தில் அருந்துவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

வெண்பூசணி கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்களைக் கொண்டதாகும். மேலும், மேலும் இது வைட்டமின் சி, நியாசின், தியாமின், மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற வைட்டமின்களின் மதிப்புமிக்க ஆதாரங்களாகும்

எடையிழப்புக்கு

வெண்பூசணி சாற்றில் உள்ள குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதுடன், நிறைவு மற்றும் திருப்தியை அளிக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கலாம்

ஆற்றலை அதிகரிக்க

வெண்பூசணியில் வைட்டமின் பி3 உள்ளது. இது உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. எனவே இது இரத்த சோகை மற்றும் உடல் பலவீனமாக உள்ளவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்

குளிர்ச்சியைத் தர

இந்த சாறு அருந்துவது உடலை குளிர்விக்க உதவுகிறது. எனவே இது கோடையில் சிறந்த தேர்வாக அமைகிறது. குறிப்பாக, உடலில் அதிக வெப்பம் உள்ளவர்கள், உடலைக் குளிர்விக்க வெண்பூசணி சாறு அருந்தலாம்

குடல் ஆரோக்கியத்திற்கு

வெண்பூசணி சாற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்திற்கு சாதகமானதாக அமைகிறது. இது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், அஜீரணத்தை ஏற்படுத்தும் மலச்சிக்கல் போன்றவற்றைக் குறைத்து பெருங்குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது