உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடையைக் குறைக்கவே பலரும் விரும்புகின்றனர். ஆனால், இதற்கு சரியான முறையில் உணவு உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதில் எடையிழப்புக்கு உணவுகளை மெல்லும் கலை ஒரு சிறந்த தேர்வாகும்
மெதுவாக சாப்பிடுவது
உணவை நீண்ட நேரம் மென்று சாப்பிடுவது உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு மெதுவாக உட்கொள்வது சாப்பிடும் வேகத்தை குறைக்கிறது. இது மூளை ஓய்வெடுக்கவும், முழுமையாக உணர வைக்கவும் அனுமதிக்கிறது
செரிமானத்தை மேம்படுத்த
உணவை சரியாக மென்று சாப்பிடுவதன் மூலம் உணவை உடைப்பது செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது. மேலும் இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது
பகுதி அளவைக் கட்டுப்படுத்துவதற்கு
மெதுவாக உணவை சாப்பிடும் போது அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கலாம். ஏனெனில், குறைவாகவே சாப்பிடுவதால் அது வயிறு நிரம்பிய உணர்வைத் தரக்கூடியதாக அமையும்
வீக்கத்தைத் தடுக்க
நன்கு உணவை மென்று உட்கொள்ளும் போது, அது உணவை எளிதாக மற்றும் விரைவாக செரிமானம் அடைய வைக்கிறது. இது மிகவும் சுறுசுறுப்பான வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது
கலோரிகளைக் குறைக்க
உணவை அதிகமாக மென்று சாப்பிடும் போது, குறைவான கலோரிகளே உட்கொள்ளப்படுகிறது. இது எடையிழப்பை ஆதரிக்க உதவுவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது
எத்தனை முறை உணவை மெல்ல வேண்டும்?
அதிகபட்ச முடிவுகளைப் பெற, விழுங்குவதற்கு முன்னதாக ஒவ்வொரு கடியையும் 20-30 முறை மென்று சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது