தண்ணீர் குடிக்கும் முன் அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதற்கான காரணங்கள்

By Gowthami Subramani
21 Mar 2025, 16:48 IST

குடிநீரில் உப்பு சேர்த்து குடிக்கும் பழக்கம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதாகும். இது பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. இதில் குடிக்கும் நீரில் உப்பு சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்

தசை செயல்பாட்டை பராமரிக்க

நரம்பு மற்றும் தசை செயல்பாட்டை பராமரிக்க சோடியம் அவசியமாகும். போதுமான அளவு சோடியம் நிறைந்த லேசாக உப்பு சேர்க்கப்பட்ட நீரை அருந்துவது தசைப்பிடிப்புகளைத் தடுக்கவும், பயனுள்ள நரம்பு பரவலை உறுதி செய்யவும் உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

உப்பு கலந்த நீர் செரிமான நொதிகள் மற்றும் உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டி, செரிமான செயல்முறையை ஊக்குவிக்கிறது. எனவே குடிநீரில் சிறிதளவு உப்பைச் சேர்ப்பது இந்த சுரப்புகளை அதிகரிப்பதுடன், செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது

இரத்த அழுத்தத்தை சமப்படுத்துகிறது

அதிகளவு உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என்றாலும், ஒரு சிறிய அளவு திரவங்களை சமநிலையில் வைத்திருப்பதன் மூலம் அதை உறுதிப்படுத்துகிறது. இந்த சமநிலையானது இரத்த அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது

நீரேற்றத்தை அதிகரிக்க

உப்பில் உள்ள சோடியம், உடலின் திரவ சமநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு உதவும் ஒரு முக்கியமான எலக்ட்ரோலைட்டாக செயல்படுகிறது. தண்ணீரில் சிறிது உப்பு சேர்ப்பது, குறிப்பாக, அதிக வியர்வை வெளியேற்றத்திற்குப் பின் அல்லது கடுமையான உடற்பயிற்சிக்குப் பின் தண்ணீரை எளிதில் உறிஞ்ச உதவுகிறது

நச்சுக்களை நீக்குவதற்கு

உப்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இது உடலில் இருந்து நச்சுகள் மற்றும் ஆபத்தான பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது. சிறிதளவு உப்பு சேர்த்த தண்ணீரைக் குடிப்பது உடலிலிருந்து நச்சுக்களை நீக்குகிறது. மேலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது

ஆற்றல் அளவை அதிகரிக்க

உடலில் செல்லுலார் ஆற்றல் உற்பத்திக்கு சரியான எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். தண்ணீரில் குறைந்த அளவு உப்பைச் சேர்ப்பது இந்த சமநிலையை அடைய உதவுகிறது. இது சோர்வை எதிர்த்துப் போராடவும், பகலில் ஆற்றல் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த

கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை போதுமான சோடியம் உள்ளடக்கம் பாதிக்கிறது. படுக்கைக்கு முன்னதாக தண்ணீரில் சிறிது உப்பு கலந்து குடிப்பது இந்த ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, சிறந்த மற்றும் நல்ல இரவு தூக்கத்திற்கு வழிவகுக்கிறது