உலர் திராட்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என நம்மில் பலருக்கு தெரியும். நம்மில் பலர் காலையில் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவோம். இதன் நன்மைகள் பற்றி நம்மில் பலருக்கு தெரியும். உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீர் பற்றி உங்களுக்கு தெரியுமா?
சத்துக்கள் நிறைந்தது
உலர் திராட்சையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளனர். இதில், நல்ல அளவு வைட்டமின்கள், உணவு நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
எடை குறைக்க உதவும்
பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் திராட்சை நீரில் காணப்படுகின்றன. இவை இரண்டும் உடலில் இருக்கும் இயற்கையான சர்க்கரையை ஆற்றலாக மாற்றுகிறது. இது பசியைக் குறைக்கிறது மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது.
வயிற்றுக்கு நல்லது
திராட்சை தண்ணீரில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். திராட்சையில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மலச்சிக்கலைத் தடுக்கும். இதனால், வயிறு ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.
உடலில் இரத்தம் அதிகரிக்கும்
திராட்சை தண்ணீரில் நல்ல அளவு இரும்பு, வைட்டமின் பி மற்றும் தாமிரம் உள்ளது. இது இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது. இரும்பு இரத்த அணுக்களை அதிகரிக்கிறது மற்றும் தாமிரம் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
ஆற்றல் பெருகும்
தினமும் காலையில் திராட்சை தண்ணீர் குடிப்பது உங்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கும், இது நாள் முழுவதும் சிறப்பாக வேலை செய்ய உதவும்.
உடலை டீடாக்ஸ் செய்யும்
திராட்சை நீர் இரத்த சுத்திகரிப்புக்கு வேலை செய்கிறது. இது கல்லீரலுக்கு நன்மை பயக்கும் மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து உடலை காப்பாற்ற முடியும்.