எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதற்கு வெள்ளை பூசணி பெரிதும் பயனுள்ள உணவு முறையாகும்.
சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். அதேபோல் உணவு முறையும் முக்கியம்.
வெள்ளை பூசணியில் உள்ள நார்ச்சத்துக்கள் முழுமையின் உணர்வை ஊக்குவித்து, ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளலைக் குறைக்கிறது.
பூசணிக்காய் இரத்தச் சர்க்கரைக் குறைவு விளைவைக் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
உடல் சூட்டை குறைக்க பலர் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உடல் சூட்டை குறைக்க வெள்ளை பூசணி சிறந்த தேர்வாக இருக்கக் கூடும்.