புடலங்காயில் பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. வாரம் இரண்டு முறை உங்கள் உணவில் புடலங்காயை சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இதன் பலன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
எடை குறைப்பு
குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காயயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.
நச்சு நீக்கம்
புடலங்காயில் உள்ள டையூரிடிக் பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
புடலங்காயில் இருந்து தயாரிக்கப்படும் சாறு இதயம் தொடர்பான பிரச்சினைகளை குறைக்க உதவும்.
மலச்சிக்கல் நிவாரணம்
புடலங்காய் வயிற்றை சுத்தப்படுத்த உதவும் லேசான மலமிளக்கியாக செயல்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி
புடலங்காயில் வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
வீக்கத்தைக் குறைக்கும்
புடலங்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
தோல் ஆரோக்கியம்
புடலங்காய் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும், புடலங்காய் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
இரத்த சர்க்கரை
புடலங்காய் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.