அடிக்கடி பசி
நாள் முழுவதும் சிலர் மீண்டும் மீண்டும் பசி எடுக்கும் தூண்டுதல்களை அனுபவிப்பர். இதனால் முதலில் அவர்கள் நாடுவது ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளே ஆகும். ஆனால் இது எடை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனையை விளைவிக்கலாம். இதில் பசியைக் கட்டுப்படுத்தவும், குறைந்த கலோரி உட்கொள்ளலுக்கும் உதவும் புரத உணவுகளைக் காணலாம்
பாதாம்
ஒரு சிறிய கைப்பிடி பாதாமில் சுமார் 6 கிராம் அளவிலான புரதம் நிறைந்துள்ளது. மேலும் இது ஒற்றை நிறைவுறா கொழுப்பையும் வழங்குகிறது. இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது
பருப்பு வகைகள்
பொதுவாக பருப்பு வகைகள் புரதச்சத்து நிறைந்தவை மட்டுமல்லாமல் நார்ச்சத்துக்களும் நிறைந்ததாகும். இவை பசியைக் குறைக்க உதவுகிறது
முட்டைகள்
முட்டைகளில் உள்ள அதிகளவிலான புரதச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்தி, திருப்தியை அளிக்கிறது. பசியைக் கட்டுப்படுத்த முட்டைகளை வறுத்தோ, வேகவைத்தோ அல்லது உங்களுக்கு பிடித்த வழியில் எடுத்துக் கொள்ளலாம்
குயினோவா
இது ஒரு முழுமையான புரதம் ஆகும். மேலும் இது உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாத ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் பசியைக் குறைப்பதன் மூலம் அதைக் கட்டுப்படுத்த உதவுகிறது
டோஃபு
டோஃபுவில் உள்ள புரதம் பசியைக் குறைக்க உதவுகிறது. இது வயிறு நிரம்பிய உணர்வை மேம்படுத்த உதவும் சிறந்த உணவாகும்
சியா விதைகள்
சியா விதைகளை கலந்த பானத்தை உட்கொள்வது செரிமானத்தை மெதுவாக்கி, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது
கிரேக்க தயிர்
கிரேக்க தயிரில் அதிகளவிலான புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாலட், பழ சாலட் அல்லது வெற்று உணவாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்