உடல் ஆரோக்கியமாகவும், சத்தாகவும் இருக்க உணவில் தினமும் போதுமான அளவு புரதம் சேர்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஜிம்முக்கு செல்பவர்கள் கண்டிப்பாக புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புரதம் நிறைந்த உணவுகள் இங்கே.
பால் பொருள்கள்
பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களில் புரதம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றுடன் கிரீம், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தயிர் போன்றவை ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட புரதத்தின் சிறந்த ஆற்றல் மையமாகும். மேலும் பால் மற்றும் பால் பொருள்கள் நல்ல செரிமானம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த அளவை ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், புரதம் தசைகளை வளர்க்க மற்றும் பராமரிப்பதற்கு ஏற்றதாக அமைகிறது.
பருப்பு வகைகள்
பொதுவாக பருப்பு வகைகள் இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் புரதங்கள் நிறைந்த உணவாகும். ஆனால், பருப்பு ஆனது வேகவைத்தல் மற்றும் பதப்படுத்துதல் போன்றவற்றைத் தவிர, இதை சுவையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற பல்வேறு வழிகள் உள்ளது. மேலும், பருப்பு வகைகளை நீங்கள் ரொட்டி, சாலட் அல்லத் பராத்தா போன்ற பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சிலர் தோசைகளைத் தயார் செய்வதற்கு பருப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இவை ஒரு சிறந்த ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் நிறைந்த காலை உணவாகக் கருதப்படுகிறது.
பீன்ஸ் மற்றும் முளைக்கட்டிய பயறுகள்
இன்று பலரது வீடுகளில் பீன்ஸ் மற்றும் முளைகட்டிய பயறு வகைகள் அன்றாடம் தேர்வு செய்யும் உணவு வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இதை ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுடன் சமநிலைப்படுத்தாமல் அவற்றை உட்கொள்வது பயனுள்ளதாக இருக்காது. தினந்தோறும் ஒரு கப் ராஜ்மா, சனா அல்லது வேறு சில பருப்பு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதன் ஊட்டச்சத்து ஆற்றல் மையங்கள் மற்ற ஊட்டச்சத்துக்களுடன் புரதங்களை வழங்குகிறது.
முட்டைகள்
முட்டைகள் பொதுவாக பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருளாகும். இது வலுவான மற்றும் ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது. எனவே தான் தினமும் ஒரு முட்டை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வது அவசியமாகும். இது உடலின் அனைத்து செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பிற்கு உதவுகிறது. புரத உணவுகள் செல்லுலார் மட்டத்தில் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு போன்ற முக்கிய அமைப்புகளை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
நட்ஸ்
நட்ஸ் வகைகள் நாம் அனைவருமே சாப்பிட வேண்டிய ஒரு சிறந்த தின்பண்டமாகக் கருதப்படுகிறது. பொதுவாக நட்ஸ் வகைகளை நாம் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு நாம் அக்ரூட், பாதாம் போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், இதை வறுத்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிடலாம்.