பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 6 ஊட்டச்சத்து நிறைந்த லட்டுகள்!

By Devaki Jeganathan
28 May 2025, 13:25 IST

பெண்கள் ஆரோக்கியமாக இருக்க, தங்கள் உணவின் ஒரு பகுதியாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்களை சேர்க்க வேண்டும். அந்தவகையில், பெண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் 6 மருத்துவ குணம் நிறைந்த லட்டு பற்றி இங்கே பார்க்கலாம்.

எள் லட்டு

சத்துக்கள் நிறைந்த எள் லட்டுகளை பெண்கள் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இதில், உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தை போக்குகிறது. மேலும் மாதவிடாய் பிரச்சினையை குறைக்கும்.

பாதாம் பிசின் லட்டு

இதனை உட்கொள்வதன் மூலம் பெண்களின் உடலில் ஆற்றல் தங்கும். மேலும், இதில் குறைந்த கொழுப்பு உள்ளது. இது கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், உடல் சூட்டை தணிக்கும்.

சுக்கு லட்டு

சுக்கு லட்டுகளில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் எலும்புகளை வலுவாக்கும். இவற்றை சாப்பிடுவதால் முதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

உலர் பழ லட்டு

உலர் பழங்களான பாதாம், திராட்சை, அக்ரூட் பருப்புகள், முந்திரி போன்றவற்றை கலந்து தயாரிக்கப்படும் லட்டுகளை சாப்பிடுவது, உடல் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆளி விதை லட்டு

ஆளிவிதை லட்டுவில் நார்ச்சத்து உள்ளதால் வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது. இதில் கால்சியம் மற்றும் புரோட்டீன் இருப்பதால் ரத்தசோகை வராமல் தடுக்கிறது.

தேங்காய் லட்டு

தேங்காய் லட்டு சாப்பிட்டால் கால்சியம் குறைபாடு நீங்கும். அவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது வயிறு தொடர்பான நோய்களைத் தடுக்கிறது.

ராகி லட்டு

ராகி மாவு, வெல்லம், பருப்புகள் மற்றும் விதைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சுவையான, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த லட்டு இது. இது உடல் எடையை குறைக்க பயன்படும்.