உணவுப்பொருளான பெருங்காயம் சுவை மற்றும் நறுமணத்திற்காக சேர்க்கப்படுவதாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
செரிமான பிரச்சனை
வெறும் வயிற்றில் பெருங்காயம் தண்ணீர் குடிப்பது செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, வீக்கம், வாயு போன்ற அஜீரணத்தின் அறிகுறிகளை நீக்குகிறது
குடல் ஆரோக்கியத்திற்கு
பெருங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த தண்ணீரைத் தவறால் குடித்து வருவது ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது
இரத்த சர்க்கரை அளவை குறைக்க
பெருங்காயம் இரத்தச் சர்க்கரையை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த தண்ணீரை அருந்துவது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோய்க்கு முக்கிய பங்கு வகிக்கிறது
சுவாச ஆரோக்கியத்திற்கு
பெருங்காயம் இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் பெருங்காயம் தண்ணீரைக் குடிப்பது ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த
பெருங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் கலவைகள் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தி தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது
எடை இழப்பிற்கு
பெருங்காய தண்ணீர் குடிப்பது உடல் எடையை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க முயல்பவர்கள் தினமும் காலையில் பெருங்காய தண்ணீரை அருந்தலாம்
சளி தொடர்பான பிரச்சனைக்கு
குளிர்காலத்தில் பெருங்காய நீர் எடுத்துக் கொள்வது சளி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது
மாதவிடாய் வலி குறைய
மாதவிடாய் பிரச்சனை கொண்டவர்களுக்கு பெருங்காயத் தண்ணீர் சிறந்த தீர்வாக அமைகிறது. இது உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுவதுடன், மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது