பனை வெல்லம் மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் தருவதாகும். இது பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இனிப்பு பொருளாகும். தினமும் ஒரு துண்டு பனை வெல்லத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்
எடையிழப்புக்கு
பனை வெல்லத்தில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரைக் குறைப்பதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கவும், வயிற்றுப் உப்புசத்தைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பனை வெல்லத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
செரிமான ஆரோக்கியத்திற்கு
பனை வெல்லத்தை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் செரிமானம் சிறப்பாக நடைபெற்று, செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. இது வயிற்றுக்குள் செரிமான நொதிகளை செயல்படுத்தவும், குடல் பகுதிகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது
சளி மற்றும் இருமல்
பனை வெல்லம் வறட்டு இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இது சுவாசப் பாதையில் உள்ள சளியை கரையச் செய்து இருமலில் இருந்து விடுபட உதவுகிறது. மேலும் இது ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்
ஆற்றலை அதிகரிக்க
உடலில் ஆற்றல் குறைவாக இருப்பது போல் உணரும் போது, பனை வெல்லத்தை சிறிது சாப்பிடலாம். இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், வழக்கமான சர்க்கரையை விட வேகமாக உணவை ஜீரணிக்க உதவுகிறது. தினமும் ஒரு துண்டு பனை வெல்லம் சாப்பிடுவது உடலில் ஆற்றலை சீரான அளவில் வைத்திருக்கும்
வயிற்று வலி நிவாரணத்திற்கு
மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் அடிவயிற்று வலிக்கு சிகிச்சை அளிக்க பனை வெல்லம் உதவுகிறது. இதை உட்கொள்ளும் போது, எண்டோர்பின்களை வெளியிடச் செய்வதன் மூலம் உடலில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் அளித்து, உடலை சாந்தமாக்குகிறது
மூட்டு வலி குறைய
பனை வெல்லம் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது. இதை நம் அன்றாட உணவில் சேர்ப்பது மூட்டு வலி மற்றும் பிற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளைக் குறைக்கிறது. ஏனெனில், இதில் எலும்புகளை வலிமையாக்கும் மற்றும் ஆரோக்கியமாக்கும் கால்சியம் அதிகளவில் உள்ளது