துளசி இலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலின் பல நோய்களை குணப்படுத்துகிறது. இதனால் வயிற்றுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்.
சத்துக்கள் நிறைவு
துளசி இலையில் உள்ள ஆன்டி-செப்டிக், ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் சளி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தும்.
வயிற்றுக்கு நன்மை பயக்கும்
துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். துளசி செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
மன அழுத்தம் நீங்க
துளசி மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதில் அடாப்டோஜென் உள்ளது. இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
துளசி டீ குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயாளிகளுக்கு துளசி இலைகள் நன்மை பயக்கும். துளசி உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
துளசி இலையை கஷாயம் செய்து குடிக்கலாம் அல்லது துளசி டீ குடிப்பதும் உடலுக்கு நன்மை தரும்.