செவ்வாழை சாப்பிடுவதால் என்ன பலன்.?

By Ishvarya Gurumurthy G
21 Oct 2024, 08:26 IST

விந்தணு அதிகரிப்பு முதல்.. பார்வை திறன் மேம்பாடு வரை.. செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கிடைக்கிம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

விந்தணு அதிகரிப்பு

செவ்வாழைப்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி, விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதில் உள்ள துத்தநாகம் ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் விந்தணு டிஎன்ஏ பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.

அழகிய சருமம்

செவ்வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள், வயதான பிரச்னைகளை குறைக்கிறது. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது தோல் மற்றும் முடிக்கு முக்கியமானது. மேலும், கொலாஜன் தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

இரத்த சுத்திகரிப்பு

வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த, செவ்வாழைப்பழம் உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இரும்பு அளவை அதிகரிக்க உதவுகிறது. கூடுதலாக, வைட்டமின் B6 உள்ளடக்கம் புரதச் சிதைவு மற்றும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. செவ்வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வது இரத்த சோகை பிரச்னையை தீர்க்கவும் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் B6 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். இதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது உங்களை வைரஸ் மட்டும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து காக்க உதவும்.

இரத்த அழுத்தம் குறையும்

உங்களுக்கு இரத்த அழுத்தம் (BP) அதிகமாக இருந்தால், தினமும் ஒரு செவ்வாழை பழத்தை உட்கொள்ளவும். இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி குறைக்கிறது.

கருவுறுதல் பிரச்னை தீரும்

இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் கருவுறுதல் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் செவ்வாழை பழம் சாப்பிடுவது இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக்குகிறது. இது கருவுறுதலை அதிகரிக்கிறது.

சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்

செவ்வாழை பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்.

கண் ஆரோக்கியம்

செவ்வாழைப்பழத்தில் லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய இரண்டு கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (AMD), கண் பிரச்னைகளுக்கு எதிராக லுடீன் பாதுகாக்கிறது. லுடீன் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், AMD ஆபத்தை 26% வரை குறைக்கலா.

உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், நீங்கள் செவ்வாழை பழம் எடுத்துக்கொள்ளும் முன், உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.