மஞ்சள் டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
26 Jan 2025, 21:41 IST

மஞ்சள் டிராகன் பழம்

டிராகன் பழம் மற்ற வகைகளை விட மிகவும் இனிமையான சுவையைத் தரக்கூடிய பழமாகும். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் மஞ்சள் டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

உடல் எடை குறைய

இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் பசியைக் குறைத்து அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. இது எடையைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க சிறந்த தேர்வாக அமைகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

மஞ்சள் டிராகன் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களுக்கு உணவாகச் செயல்படுகிறது. இது ஒட்டுமொத்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு இன்றியமையாததாகும். இவை மலச்சிக்கல்லைத் தடுக்கவும், குடல் இயக்கத்தை சீராக்கவும் உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

மஞ்சள் டிராகன் பழத்தின் விதைகளில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை இதயத்தைப் பாதுகாக்கும் பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றவையாகும். இது உடலில் கெட்ட கொழுப்பைக் குறைத்து, சிறந்த இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

உடலை நீரேற்றமாக வைக்க

இந்த பழத்தில் கணிசமான அளவிலான தண்ணீர் உள்ளது. இவை சரியான நீரேற்றத்தை பராமரிக்கவும், உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தவும், சருமத்தை ஈரப்பதமாக மற்றும் மென்மையாக வைக்கிறது. மேலும் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கிறது

சரும ஆரோக்கியத்திற்கு

மஞ்சள் டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கும் கொலாஜன் உற்பத்திக்கு பங்களிக்கிறது. சரும நீரேற்றத்தை மேம்படுத்தவும், சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது சருமத்திற்கு இளமையான தோற்றத்தைத் தருகிறது