நாவல் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
26 Jul 2024, 09:00 IST

சுவையுடன் கூடிய பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் பழங்களில் நாவல்பழமும் ஒன்று. இதில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. நாவல் பழத்தின் நன்மைகள் சிலவற்றைப் பார்ப்போமா?

உடல் எடை குறைய

நாவல் பழத்தில் குறைந்த கலோரிகள் உள்ளது. மேலும், இதன் நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடை குறைவதில் பங்களிக்கிறது

நீரிழிவு நோய்க்கு

இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் நாவல் பழத்தை உட்கொள்ளலாம். மேலும் இதில் உள்ள பாலிபினோலிக் பொருட்கள் நீரிழிவு சிகிச்சையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு

நாவல் பழத்தில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

ஹீமோகுளோபின் அதிகரிக்க

இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தின் மூலம் உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்பட்டு உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

நாவல் பழத்தில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், உடலின் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது

வாய் ஆரோக்கியத்திற்கு

நாவல் பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது வாய்வழி தொற்று மற்றும் பாக்டீரியாவிலிருந்து பற்களைப் பாதுகாக்கவும், பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

நாவல் பழத்தின் வைட்டமின் சி சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. மேலும் இது கறை, முகப்பரு, சுருக்கங்கள் போன்றவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது